சிவகங்கை
அறிவியல் வினாடி-வினா போட்டி
|அறிவியல் வினாடி-வினா போட்டி நடந்தது.
சிவகங்கை மாவட்ட அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி, வினா போட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகங்கை சீமை இணைந்து சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகங்கையில் நடைபெற்றது. போட்டியை பள்ளி முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். நடுவர்களாக செந்தில்குமார், பிரான்சிஸ் சேவியர், பிரபாகரன், சின்னப்பராஜ், தனுஷ் ஸ்டாலின், ஜெயபாலன் ஸ்டாலின், கவுரி, விஜயராஜ் செயல்பட்டனர். பரிசளிப்பு விழாவுக்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். பொருளாளர் ரகுநாதன், ரோட்டரி கிளப் ஆப் சிவகங்கை சீமையின் பட்டய தலைவர் சம்பத், தலைவர் கலைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். மாவட்ட கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம் நோக்க உரையாற்றினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள், புத்தகங்களை பரிசாக வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் சேவற்கொடியோன், இணைச்செயலாளர் ஆரோக்கியமேரி, செயற்குழு உறுப்பினர் மணவாளன், பள்ளி துணை முதல்வர் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சிவகங்கை கிளை செயலாளர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.