< Back
மாநில செய்திகள்
வினாடி-வினா போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

வினாடி-வினா போட்டி

தினத்தந்தி
|
8 Oct 2022 12:15 AM IST

வினாடி-வினா போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக இப்போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, கார்த்திக், மகேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் காளிராசா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சுந்தர்ராஜன், கவுரவ தலைவர் சாஸ்தாசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிளை செயலாளர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். சிவகங்கை லயன்ஸ் சங்க தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் வேதராஜ், முன்னாள் தலைவர் ராம்பிரபாகர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, இணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கிளை பொருளாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்