< Back
மாநில செய்திகள்
ஓபிஎஸ் குறித்த கேள்வி... பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

ஓபிஎஸ் குறித்த கேள்வி... பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
20 Sept 2022 12:51 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

அமித்ஷாவுடன் 20 நிமிடங்கள் பேசிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்ததாகவும் பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் பேசினார். அப்போது ஓபிஎஸ் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, சாரி வணக்கம் என கூறி பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்தபடி சிரித்தபடியே சென்றுவிட்டார்.




மேலும் செய்திகள்