< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணி எலிசபெத் மறைவு: சசிகலா பயணம் நாளை ரத்து
|10 Sept 2022 8:02 PM IST
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, நாடு முழுவதும் நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, நாடு முழுவதும் நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுவதால், எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சசிகலா 11-ந்தேதி(இன்று) சேலம் மாவட்டத்துக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து 12-ந்தேதி(நாளை) சேலம் மாவட்டத்துக்கும், 13-ந்தேதி (நாளை மறுதினம்) ஈரோடு மாவட்டத்துக்கும் சசிகலா தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். சசிகலா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள், அவர் செல்லும் வழியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.