தனியார் மருத்துவமனை கேண்டீன் ஊழியர்களுக்கு இடையே தகராறு - கத்தியால் வெட்டியதில் 4 பேர் படுகாயம்
|சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் படுயாம் அடைந்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சாப்பிடுவதற்கான கேண்டீன், மருத்துவமனை வளாகத்தினுள் செயல்பட்டு வருகிறது.
இந்த கேண்டீனில் பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவரும் அவரது நண்பர் ஜெயசூர்யா என்பவரும் சேர்ந்து கேண்டீனில் மது அருந்திவிட்டு, வாந்தி எடுத்துவிட்டு தூங்கியுள்ளனர். இதனை கண்ட சக ஊழியர்கள் ஆத்திரமடைந்து, விக்னேஷை திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அருகில் காய்கறி வெட்டுவதற்காக இருந்த கத்தியை எடுத்து நால்வரையும் வெட்டி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தியால் வெட்டிய விக்னேஷை மயிலாப்பூர் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.