< Back
மாநில செய்திகள்
106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி
மாநில செய்திகள்

106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

தினத்தந்தி
|
22 Aug 2024 7:23 AM IST

நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 106 ரெயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை தவிர்த்து, துரித பயணங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ரெயில்வேயில் காகிதமில்லாத பயணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும்நிலையில், நவீன காலத்திற்கு ஏற்ப பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை பயன்படுத்தி கியூஆர் கோடு மூலம் எளிதில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 106 ரெயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இந்த முறையில் பயணிகளுக்கும், கவுன்டர்களில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கும் சில்லறை பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.

இந்த கியூ.ஆர். கோடு வசதியானது மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, பாவூர்சத்திரம், தூத்துக்குடி, மீளவிட்டான், பழனி உள்ளிட்ட 106 ரெயில் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளன.

மேலும் செய்திகள்