< Back
மாநில செய்திகள்
சுகாதார வளாகத்தில் கியூ ஆர் கோடு
சிவகங்கை
மாநில செய்திகள்

சுகாதார வளாகத்தில் கியூ ஆர் கோடு

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

சுகாதார வளாகத்தில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சியில் உலக கழிப்பறை தினத்தையொட்டி அனைத்து சுகாதார வளாகங்களும் தூய்மை பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பொது மற்றும் சமுதாய சுகாதார வளாகங்களில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தூய்மை இந்தியா திட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டு பொதுமக்களிடம் அது குறித்த பயன்பாடு விளக்கம் அளிக்கப்பட்டது. இளையான்குடி பழைய பஸ் நிலையம், கீழாயூர் காலனி, கீழாயூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுகாதார வளாகங்களில் இந்த கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுகாதார வளாகம் சம்பந்தமான புகார்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்களை இணையதள கியூ ஆர் கோடு மூலம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தி தெரிவிக்கலாம். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் கூறுகையில், பொதுமக்கள் இணையதளத்தில் உள்ள கியூ ஆர் கோடு மூலம் புகார்களை தெரிவித்தால் சுகாதார வளாகங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்