< Back
மாநில செய்திகள்
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ்: கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் கார்த்திகேயன் முரளிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ்: கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் கார்த்திகேயன் முரளிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
20 Oct 2023 4:08 PM IST

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் 7 வது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆன மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி எதிர் கொண்டார். இதில் அவர் கருப்பு காய்களுடன் ஆடினார்.

மிகவும் அற்புதமாக ஆடிய கார்த்திகேயன், கார்ல்சனின் சிறிய தவறை கச்சிதமாக பிடித்து கொண்டார். இதனை சரியாக பயன்படுத்தி இறுதியில் அவர் அபார வெற்றி பெற்றார். மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்த்திகேயன் முரளி அபாரமாக ஆடி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார்.

7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்