< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி வளாகத்தில் சிக்கிய மலைப்பாம்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் சிக்கிய மலைப்பாம்பு

தினத்தந்தி
|
12 Sept 2023 3:45 AM IST

நத்தம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த மலைப்பாம்பு சிக்கியது.

நத்தம் அருகே சிறுகுடி மஞ்சநாயக்கன்பட்டியில், அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பள்ளியின் பின்புறம் ஊர்ந்து கொண்டிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். 10 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்