< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பொம்மசமுத்திரம் அருகேவாழை தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
|28 Sept 2023 12:30 AM IST
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஊராட்சி புலிகரடு பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சுமார் 8 அடி உயர மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை கண்ட தோட்ட உரிமையாளர் ராஜசேகரன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் ்தெரிவித்தார். இதையடுத்து ஜம்பூத்து பீட் வனக்காப்பாளர் விஜயகுமார், காரவள்ளி சோதனைச்சாவடி உதவியாளர் கண்ணன் ஆகியோர் அங்கு சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த சம்பவம் புலிகரடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.