< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்

தினத்தந்தி
|
28 Oct 2022 6:04 PM IST

பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது, பயணிகள் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சில் தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர். ஆனால் பஸ்சின் அவசர கால வழி திறக்காததால் முன் பக்க கண்ணாடியை உடைத்து அந்த வழியாக பயணிகள் பத்திரமாக வெளியேறினர். இதில் சில பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. பின்னர் மாற்று வாகனத்தில் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்