< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
புத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் முதல் இடம்
|11 Feb 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் புத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் முதல் இடம் பிடித்து ரூ.36 ஆயிரம் பரிசு பெற்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறையில், மாவட்ட அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 16 அரசு கலைக்கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் முதல் இடத்தை பெற்று ரூ.36 ஆயிரம் ரொக்க பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் சசிகுமார் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் பாராட்டினர்.