< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
|8 March 2023 12:34 AM IST
பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் வன்னியர் குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.