< Back
மாநில செய்திகள்
தூய சவேரியார் ஆலய தேர்பவனி
விருதுநகர்
மாநில செய்திகள்

தூய சவேரியார் ஆலய தேர்பவனி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:19 AM IST

விருதுநகர் தூய சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.


விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு ஆலய வளாகம் மின் விளக்குகளாலும், வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தினசரி மாலையில் நவநாள் திருப்பலியும், மறையுைரையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கோவில்பட்டி பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், நாலாட்டின்புதூர் பங்குத்தந்தை வேதராஜ், கீழஈரால் பங்குத்தந்தை பால்ச்சாமி, பாளையங்கோட்டை நவீன் அடிகளார், பாண்டியன் நகர் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பொருளாளர் மார்ட்டின் குமார் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. தொடர்ந்து தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பாண்டியன் நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தினை வந்தடைந்தது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்