< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அன்னவாசல் ஆலடியம்மன் கோவிலில் புரவி எடுப்பு விழா
|7 Sept 2023 12:35 AM IST
அன்னவாசல் ஆலடியம்மன் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
அன்னவாசலில் ஆலடியம்மன், கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குதிரைகள், காளைகள், பசுக்கள், திருபாதங்கள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான சிலைகளை மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மந்தை திடலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சிலைகளுக்கு கண்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்பு சிலைகள் அந்தந்த பகுதி கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.