< Back
மாநில செய்திகள்
பிறந்தது புரட்டாசி... காசிமேடு மீன் சந்தையில் குறைந்த மக்கள் கூட்டம்
மாநில செய்திகள்

பிறந்தது புரட்டாசி... காசிமேடு மீன் சந்தையில் குறைந்த மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
18 Sept 2022 10:29 AM IST

மீன்களின் விலை குறைவாக இருந்தும் கூட, மந்தமான நிலையிலேயே வியாபாரம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

காசிமேடு மீன் சந்தையில் பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினமான இன்று கூட்டம் அதிகரித்து கானப்படும். அசைவ பிரியர்கள் பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் திரண்டு தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கிச்செல்வர்.

ஆனால் இன்று புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு இந்துக்களில் பெரும்பாலானோரும், பெருமாளை வழிபடுவோரும் இம்மாதம் மட்டும் அசைவம் உட்கொள்ளமாட்டார்கள்.

இதன் காரணமாக காசிமேடு மீன்சந்தையில் அசைவபிரியர்கள் கூட்டம் குறைந்து கானப்பட்டது. மீன்களின் விலை குறைவாக இருந்தும் கூட, மந்தமான நிலையிலேயே வியாபாரம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்