< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மதனகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி வளர்பிறை ஏகாதசி உற்சவம்
|26 Sept 2023 11:38 PM IST
மதனகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி வளர்பிறை ஏகாதசி உற்சவம் நடந்தது.
பெரம்பலூர் நகரில் உள்ள பஞ்ச பாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி வளர்பிறை (பார்ஸ்வ) ஏகாதசி மற்றும் திருவேங்கடமுடையான் அவதார நட்சத்திரமான திருவோண நட்சத்திர உற்சவத்தை ஒட்டி சிறப்பு வழிபாடும், பிரகார உலாவும் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதனை முன்னிட்டு உற்சவபெருமாள் திருக்கோவிலின் நான்கு பிரகாரத்தையும் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் சீர் பாத பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர்.