திருவள்ளூர்
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத திருவிழா
|மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு திருநாம கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி, மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண ஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை 14-ந்தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேரோட்டம் 16-ந்தேதியும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு அய்யா பூப்பல்லாக்கில் பதிவலம் வருதல், பின்னர் இரவில் திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.