< Back
மாநில செய்திகள்
புரட்டாசி கேட்டை நட்சத்திர உற்சவம்
திருவாரூர்
மாநில செய்திகள்

புரட்டாசி கேட்டை நட்சத்திர உற்சவம்

தினத்தந்தி
|
5 Oct 2022 6:45 PM GMT

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி கேட்டை நட்சத்திர உற்சவம் நடந்தது.

வடுவூர்:

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாத கேட்டை நட்சத்திர உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள அகோபில மடத்தில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்கு சாமியின் முன்பு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் தளியல் இடப்பட்டது. தொடர்ந்து கோதண்டராமருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்