< Back
மாநில செய்திகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு  புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்க மானியம்  கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்க மானியம் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
6 Jun 2022 11:18 PM IST

சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்க மானியம் கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (3 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கு 30 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்துக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட விவரங்களுடன் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்