< Back
மாநில செய்திகள்
ராமர் பெயரில் பூஜை: அனுமதி மறுக்கவில்லை என அறநிலையத்துறை விளக்கம்
மாநில செய்திகள்

ராமர் பெயரில் பூஜை: அனுமதி மறுக்கவில்லை என அறநிலையத்துறை விளக்கம்

தினத்தந்தி
|
21 Jan 2024 12:48 PM IST

பொய்யான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளை தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் நாளை அன்னதானம், சிறப்பு பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் பொய்யான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்