< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பின் பிடியில் புதுக்குளம் கண்மாய்
தேனி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பின் பிடியில் புதுக்குளம் கண்மாய்

தினத்தந்தி
|
25 Sept 2023 3:15 AM IST

கண்டமனூர் அருகே உள்ள புதுக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதனை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டமனூரில் 28 ஏக்கர் பரப்பளவில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சுற்றிலும் பல்வேறு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கண்டமனூர் பெரியஓடையில் இருந்து புதுக்குளம் கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தனிநபர்கள் சிலர் கண்மாயில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் மழை பெய்து ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டாலும், அதனை கண்மாயில் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.

புதுக்குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தண்ணீரை தேக்கி வைத்தால் மட்டுமே விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் நீங்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள புதுக்குளம் கண்மாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்