< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: டீக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து- 5 பேர் பலி
மாநில செய்திகள்

புதுக்கோட்டை: டீக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து- 5 பேர் பலி

தினத்தந்தி
|
30 Dec 2023 6:42 AM IST

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது.

புதுக்கோட்டை,

அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. நந்தனசமுத்திரம் அருகே லாரி வந்துகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததுடன், அதன் அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், வேன் மற்றும் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 19 ஐயப்ப பக்தர்கள் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்