< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு...!
|7 Nov 2022 10:18 PM IST
புதுக்கோட்டை மீமிசல் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு சிக்கியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் வலையை விரித்துவிட்டு வந்த மீனவர்கள், வலையை இழுத்து பார்த்த போது, வலைக்குள் சுமார் 2 அடி நீள இரும்பு பொருள் ஒன்று இருந்தது. அதனை கரைக்கு கொண்டு வந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பொருளை சோதனையிட்ட போது அது ராக்கெட் வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதில் 51 mm M (ILLG) என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் வெடிகுண்டு ராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்தது.
மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டை மீட்டு கடலோர பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.