< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை  பெருமாள்நகர்பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடைவிழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

புதுக்கோட்டை பெருமாள்நகர்பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடைவிழா

தினத்தந்தி
|
17 Aug 2023 12:15 AM IST

புதுக்கோட்டை பெருமாள்நகர் பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.

தட்டார்மடம்:

தட்டார் மடம் அருகே புதுக்கோட்டை பெருமாள் நகர் பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடை விழா 2நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு அலங்கார பூஜை, வில்லிசை, மாவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. இரண்டாம் நாள் வில்லிசை, பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 3 மணி அளவில் அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு பக்தர்கள் மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலம், 11 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், இரவு 12 மணிக்கு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பகல் 1 மணிக்கு திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்