< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குப்பை மேடான புதுக்கோட்டை... களத்தில் இறங்கிய 400 தூய்மைப் பணியாளர்கள்
|13 Nov 2023 2:54 PM IST
புதுக்கோட்டையில் நகர் முழுவதும் சுமார் 150 டன் குப்பைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி ஆகிய பகுதிகளில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றன.
இதனால், அங்கிருந்த கடையின் உரிமையாளர்கள் குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் சென்றனர். இந்த நிலையில், குப்பைகளை அகற்றும் பணியில் 400 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையே, நகர் முழுவதும் சுமார் 150 டன் குப்பைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.