< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: இன்று நடைபெற இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு
மாநில செய்திகள்

புதுக்கோட்டை: இன்று நடைபெற இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தினத்தந்தி
|
6 Nov 2023 12:01 AM IST

பாதயாத்திரை செல்லும் வழியில் மதவழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இன்று தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபெற இருந்தது. இதன்படி கீழ ராஜ வீதி வழியாக செல்ல பாதயாத்திரை பயண திட்டத்தில் இருந்தது.

ஆனால் மதவழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதாலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் கீழ ராஜ வீதியில் பாதயாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மருது, வேலுச்சாமி ஆகியோர் பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளிடம் அதற்கான நோட்டீசை கொடுத்தனர். ஆனால் அவர்கள் வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கப்படும் என்று பா.ஜனதாவுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் பாதயாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதால் நேற்று நள்ளிரவில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்