< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.! 6 பேர் காயம்
மாநில செய்திகள்

புதுக்கோட்டை: நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.! 6 பேர் காயம்

தினத்தந்தி
|
30 July 2023 5:57 PM IST

புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பூங்கொடி கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பட்டறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்