< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி- விழுப்புரம் இடையிலான மின்சார ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

புதுச்சேரி- விழுப்புரம் இடையிலான மின்சார ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து

தினத்தந்தி
|
1 Oct 2024 5:57 AM IST

நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06070) 10-ந் தேதி மட்டும் இரவு 8.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மின்சார ரெயிலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் மின்சார ரெயிலும் வருகிற 7 மற்றும் 9-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வருகிற 6-ந் தேதியும், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் 7-ந் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் இரவு 10.35 மணிக்கு புறப்படும். அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) 9-ந் தேதி மட்டும் காலை 7.35 மணிக்கு புறப்படும்.

மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) 9-ந் தேதி மட்டும் மாலை 4 மணிக்கு புறப்படும். நெல்லையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06070) 10-ந் தேதி மட்டும் இரவு 8.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்