< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

புதுச்சேரி : திரவுபதி அம்மன் கோவில் கொடை விழா

தினத்தந்தி
|
20 May 2022 10:03 PM IST

புதுச்சேரி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடந்தது. முன்னதாக இன்று காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்