புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலம்
|புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி,
காந்திஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுச்சேரியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்குகிறது. காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகே ஊர்வலம் நிறைவடைகிறது.
இந்த ஊர்வலத்திற்கு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி, சமய வேறுபாடு இன்றி மக்கள் வாழும் புதுவை மண்ணில் மக்களிடையே பிளவை உண்டாக்க பார்க்கின்றனர் என்றும், இதற்கு கவர்னர் மற்றும் அமைச்சர்கள் உடைந்தையாக உள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.