< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
மாநில செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தினத்தந்தி
|
23 Jun 2022 1:45 AM IST

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று (ஜூன் 23) முதல் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரி,

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 20-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது.

இதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று (ஜூன் 23) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர் சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதே சமயம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஜூலை 11-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்