< Back
மாநில செய்திகள்
நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை..! தேர்வுகள் ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை..! தேர்வுகள் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
21 Jan 2024 7:00 AM IST

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது

புதுச்சேரி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நாளை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த அறிவிப்பினை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.மராட்டிய மாநிலத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்