< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
|30 Aug 2022 4:00 PM IST
புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். மேலும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் முடிவடைந்ததால் பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.