< Back
மாநில செய்திகள்
ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு  வெளியீடு
மாநில செய்திகள்

ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
2 Aug 2022 7:48 PM IST

ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை இணையதளத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை,

குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதிநடைபெற்றது.

இந்த குரூப் 4 தேர்வை மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜூலை 24ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.விடை குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் வரும் 8ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்த்ப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்