< Back
மாநில செய்திகள்
இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது. - டிஜிபி அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

"இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது." - டிஜிபி அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
1 Jun 2023 8:30 PM IST

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல் வெளியீடப்பட்டு உள்ளது.

சென்னை,

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல் வெளியீடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பாக,

*கோவில் விழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், 7 நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும்

*கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்: ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்

*ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது

*ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது.

*அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்

*7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம். போன்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்