< Back
மாநில செய்திகள்
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியீடு
மாநில செய்திகள்

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியீடு

தினத்தந்தி
|
8 July 2023 10:17 AM IST

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை,

கோவை சரக டி.ஐ.ஜி. ஆக இருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு தமிழக காவல்துறைக்கு பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் கூறினர்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து தகவல்களை ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார். அதில்,

டி.ஐ.ஜியின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி மாத்திரை எடுத்துக்கொள்வார். DSR பார்ப்பதற்காக 7ம் தேதி காலை 6.30 மணிக்கு டி.ஐ.ஜி வந்தார்.

அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார் என்றார். மேலும், காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார்.

அதன் பின்னர் எனது துப்பாக்கியை கையில் எடுத்த டி.ஐ.ஜி. எப்படி பயன்படுத்துவது என கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார். நான் வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டி.ஐ.ஜி கீழே விழுந்து கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் டி.ஐ.ஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்