< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|10 Jun 2022 8:32 PM IST
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் நிபந்தனை இன்றியும், காலமுறை ஊதியத்துடனும் பணி வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுதர்சன், மாவட்ட தலைவர் போஸ் மலைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் மாணிக்க பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.