< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
|12 April 2023 2:03 AM IST
இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சமயபுரம்:
சமயபுரம் அருகே உள்ள நடு இருங்களூரை சேர்ந்தவர் ஸ்டீபன். விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். அந்த காளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் களம் கண்டு, பரிசுகளை வென்றது. இந்நிலையில் அந்த காளைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, திடீரென உயிரிழந்தது. இதையடுத்து ஸ்டீபன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஸ்டீபனின் தோட்டத்தில் காளை அடக்கம் செய்யப்பட்டது.