< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதி; பழுதான கட்டிடங்களை சீரமைத்து தர கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதி; பழுதான கட்டிடங்களை சீரமைத்து தர கோரிக்கை

தினத்தந்தி
|
27 Aug 2023 11:09 AM GMT

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் பள்ளிப்பட்டு நகரத்திற்கு வடக்கு பக்கம் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளது. இந்த தாலுகா அலுவலகத்தில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளும், 33 கிராம ஊராட்சிகளும் அடங்கும். இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிடம் மற்றும் முதியோர் உதவித்தொகை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் ஆகியோருக்கான உதவித்தொகை பெறவும் இந்த அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கில் வருகின்றனர்.

அப்படி வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட அலுவலகத்தின் வெளிப்புறம் வடக்கு பக்கம் உள்ள பொதுக்கழிப்பிட கட்டிடம் உரிய தண்ணீர் வசதி இல்லாமல் சேதமடைந்து பயனற்று காணப்படுகிறது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிட கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்