விருதுநகர்
தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆற்று நீரால் பொதுமக்கள் அவதி
|வெம்பக்கோட்டை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆற்றுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆற்றுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தரைப்பாலம்
சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் வெம்பக்கோட்டை அருகே துணை மின் நிலையம் உள்ளது. இதன் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தாயில்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போது இந்த தரைப்பாலத்தின் மேல் பகுதி வழியாக தண்ணீர் செல்லும். இந்த ஆற்றில் உள்ள நீர் பாண்டியன்குளம் கண்மாய்க்கு செல்வது வழக்கம். எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்க கூடிய இந்த தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக அளவு தண்ணீர் செல்லும்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும். இங்கு மாற்றுப்பாதை எதுவும் இல்லாததால் தண்ணீர் குறையும் வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த சாலை வழியாக சிவகாசி, சங்கரன்கோவில், கழுகுமலை, சாத்தூர், வெம்பக்கோட்ைட, திருவேங்கடம் ஆகிய பகுதிகளுக்கு ெசல்லக்கூடிய பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகமாக வரும் சமயத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றி தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.