< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
|25 Oct 2023 12:20 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
மறியல்
அரியலூர் மாவட்டம், செந்துறை காலனி தெருவில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதிக்கு நேரடியாக ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் விழாக்காலத்தில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென செந்துறை-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செந்துறை போலீசார், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செந்துறை அரியலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.