< Back
மாநில செய்திகள்
முறையாக மின்சாரம் வழங்கக்கோரிபெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் மறியல்போக்குவரத்து பாதிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

முறையாக மின்சாரம் வழங்கக்கோரிபெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் மறியல்போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
29 April 2023 9:02 PM GMT

முறையாக மின்சாரம் வழங்கக்கோரி பெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் உள்ள மின்மாற்றியில் உயர் மின் அழுத்தம் காரணமாக தினமும் மின்சார தடை ஏற்பட்டு வருவதால் அய்யனார் கோவில் தெரு, கீழபுது தெரு, தோப்புத் தெரு ஆகிய 3 தெருக்களை சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட 3 தெருக்களுக்கும் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் உள்ள முருகன் கோவில் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையால் இரவு 7.30 மணிக்கு பிறகு 3 தெருக்களுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்