< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:43 PM IST

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் பறித்த இருவரையும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார்கள். செல்போனை பறிகொடுத்தவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள், தப்பி ஓடிய செல்போன் கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் 2 பேரையும் கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கோயம்பேடு ஜெய் நகரை சேர்ந்த ஜெகன் (வயது 21), சரவணன் (30) என்பதும், இவர்கள் இருவரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிகாலையில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்