< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|30 May 2022 11:52 PM IST
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வெண்ணாவல்குடி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவரங் குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம் ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலங்குடி தாசில்தார் பணி நிமித்தமாக வரமுடியாத காரணத்தால் ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வர கூறினார்கள். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கு சென்றனர்.