< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|13 Jun 2022 11:58 PM IST
மின்வெட்டு காரணமாக பொன்னை மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவலம்
வேலூர் மாவட்டம், பொன்னை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின் வெட்டு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பொன்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் மின்வெட்டு குறித்து புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.