திருப்பத்தூர்
ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
|ஜோலார்பேட்டை அருகே விற்பனையாளரை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
ஜோலார்பேட்டை அருகே விற்பனையாளரை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
கூடுதல் அரிசி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பக்கரிதக்கா பகுதியில் தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் கோவிந்தராஜ் என்கிற ரவி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கோனரிகுப்பம் மற்றும் வீரப்பள்ளி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் இதனால் புதிதாக அனுமுத்து என்பவர் பக்கிரிதக்கா ரேஷன் கடை விற்பனையாளராக கடந்த 1-ந் தேதி முதல் பணிமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.
இவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் எங்களுக்கு இதுவரை கூடுதல் அரிசி வழங்கவில்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை ரேஷன் கடை விற்பனையாளர் அனுமுத்து கடை திறக்க வந்தார். அப்போது பொது மக்கள் எங்களுக்கு நிலுவையில் உள்ள கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்றும், மாறுதலாகி சென்ற விற்பனையாளர் கோவிந்தராஜ் தரக்குறைவாக பேசிய வந்ததாகவும் குற்றம் சாட்டினர்.
முற்றுகை
மேலும் இதுவரை எங்களுக்கு கூடுதல் அரிசி வழங்காத விற்பனையாளர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஷன் கடையை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் கூட்டுறவு சார் பதிவாளர்கள் தர்மேந்திரா மற்றும் அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி, அவர் மீது புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் புகார் மனு வழங்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பை ஏற்பட்டது.