< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
|17 Oct 2023 1:44 AM IST
எடப்பாடியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
எடப்பாடி:-
எடப்பாடி வெள்ளாண்டி வலசு அருகே அம்மன்நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் பத்திரப்பதிவு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் எடப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் கோரிக்கை மனுவை சார்பதிவாளர் செல்வராஜிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.