< Back
மாநில செய்திகள்
சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பொதுமக்களை அலைய விடக்கூடாது
விருதுநகர்
மாநில செய்திகள்

சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பொதுமக்களை அலைய விடக்கூடாது

தினத்தந்தி
|
22 Sept 2023 12:28 AM IST

சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பொதுமக்களை அலைய விடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது தங்கையின் குழந்தைக்கு 2015-ம் ஆண்டு பிறப்புச் சான்றிதழ் பெற்றபோது பெயர் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பின்பு ஆதார் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் கோவிந்தன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நீதிபதி இருதய ராணியிடம் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருதய ராணி, தாலுகா அலுவலக அதிகாரிகளை அழைத்து நேரில் விசாரணை நடத்தி உடனே சான்றிதழில் திருத்தம் செய்து கொடுக்க உத்தரவிட்டார். மேலும் அதிகாரியிடம் இது போன்று சிறு, சிறு திருத்தங்களில் பொதுமக்களை அலைய விடக்கூடாது எனவும் உத்தரவிட்டார். திருத்தப்பட்ட சான்றிதழை அவர் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்