< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காலை கிண்டி பகுதியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
|28 July 2022 8:16 AM IST
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் விழா நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ள சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக காந்தி மண்டப சாலை, கான்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.
எனவே விமான நிலையம் செல்வோர் மற்றும் இதர வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை மேற்கண்ட இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.